சமையல் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்களின் நிதி சுமையை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசிடமிருந்து மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. நாம் முதலில் சிலிண்டருக்கான முழு தொகையையும் கொடுத்து சிலிண்டரை வாங்க வேண்டும். அதன் பிறகு அதற்கான மானியத் தொகை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மானியம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மானியம் வழங்கப்பட்டது.
இருந்தாலும் நிறைய பேருக்கு மானியம் வரவில்லை என்றும் மானியத்தொகை குறைக்கப் பட்டு விட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இருந்தாலும் மானிய உதவியைச் சென்ற வருடத்தின் மத்தியில் அரசு வழங்க தொடங்கியது. தற்போது கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் அனைவருக்கும் இந்த மானியம் கிடைத்து விடாது. அதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே அரசின் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்கள் இருக்கும் மட்டுமே 200 ரூபாய் மானியம் கிடைக்கும்.
இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியம் பெறுவதற்கு ஆதார் கார்டை சிலிண்டருக்கான கூட நினைத்தால் மட்டுமே மானியம் உங்களுக்கு கிடைக்கும். அதற்கு முன்னதாக உங்களுடைய ஆதார் கார்டு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைப்போலவே சிலிண்டர் மானியம் பெறுவதற்கு அந்த வங்கி கணக்கை சிலிண்டர் கணக்குடன் பயனாளிகள் இணைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் கணக்குடன் உங்கள் ஆதார் கார்டை நேரடியாகச் சென்று இணைப்பதற்கு பாரத் கேஸ், இன்டேன், எச்பி கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களின் இணையதளத்தில் சென்று மாநிலத்திற்கான விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அதனை பூர்த்தி செய்து அருகில் இருக்கின்ற சிலிண்டரை ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். நீங்கள் எந்த நிறுவனத்திடம் இருந்து சிலிண்டர் வாங்கி வருகிறீர்களோ அந்த இணையதளத்தில் விண்ணப்பங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மொபைல் போன் மூலமாக இணைப்பதற்கு 18000-2333-555 என்ற நம்பருக்கு கால் செய்து உங்களுடைய ஆதார் மற்றும் சிலிண்டர் விவரங்களை வழங்கி இணைத்துக் கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் நினைத்துக் கொள்ள முடியும். சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து சிலிண்டர் விநியோகஸ்தருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி சிலிண்டர் இணைப்புடன் நீங்கள் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம். அப்படி செய்யாவிட்டால் உங்களுக்கு சிலிண்டர் மானியம் கிடைக்காது.