இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இது பெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டை வங்கி கணக்கு, சிலிண்டர் கணக்கு,பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் அதனை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளும் வசதி தற்போது உள்ளது.
மொபைல் நம்பர்,கைரேகை பதிவு போன்ற முக்கியமான அப்டேட்டுகளை ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று திருத்தம் செய்யும் வசதியை ஆதார அமைப்பு வழங்குகின்றது. அதனைப்போலவே முகவரி போன்ற விவரங்களை வாடிக்கையாளர்கள் தாங்களே ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டு அப்டேட்டில் இரண்டு புதிய மாற்றங்களை ஆதார் அமைப்பு கொண்டு வந்துள்ளது. அதன்படி முகவரி மாற்றம் செய்வதற்கான “address validation letter” என்ற ஆப்ஷன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த அறிவிப்பு வரும் வரை வாடிக்கையாளர்கள் யாரும் இந்த வசதியின் கீழ் தங்களது முகவரியை அப்டேட் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
ஆதார் இணையதள பக்கத்தில் இருந்து இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப் போருக்கு வேலை மாற்றம் காரணமாக வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தங்குவதற்கும் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முகவரியை திருத்தம் செய்வது தற்போது கடினமாக உள்ளது. மற்றொரு அறிவிப்பு என்னவென்றால், ஆதார் கார்டில் பழைய பிரிண்ட் அவுட்டை இனி வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது. அதற்கு பதிலாக பிவிசி எனப்படும் பிளாஸ்டிக்கார்டை மட்டுமே பிரிண்ட் எடுத்து வாங்க முடியும் என ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.