செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இது மிகவும் சவாலான ஒன்று தான் நிச்சயம். நிச்சயமாக நல்ல முறை கொண்டு செல்வேன், ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வேன், ஒற்றுமையை நாடுபவன் நான். இன்று வரையிலும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒன்றுபடவேண்டும். தொண்டர்களுடைய எண்ணப்படி நடக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த இயக்கத்தை நல்வழிப்படுத்தி செல்கின்ற பங்கை பொதுக்குழு உறுப்பினர் மட்டுமல்ல..
தமிழ்நாட்டில் இருக்கின்ற கழகத் தோழர் அனைவரும் ஒற்றை தலைமைதான் விரும்புகிறார்கள். அந்த ஒற்றை தலைமை இந்தப் படையை நல்ல முறையில் கொண்டு செல்லுகின்ற தானே தளபதியாக இருக்கின்ற எடப்பாடியார் தான் ஒற்றை தலைமைக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
அந்த அடிப்படையில் வருகின்ற பொதுக்குழுவில் அந்த தீர்மானம் நிறைவேற்றக் கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த நல்ல செய்தியை நீங்கள் கேட்கத்தான் போகிறீர்கள். இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இந்த இயக்கம் நல்ல முறையில் பணிகளை செய்து, மீண்டும் புரட்சித்தலைவி அம்மா உடைய ஆட்சியை சென்னை ஜார்ஜ் கோட்டையில் உருவாக்குவதுதான் ஒவ்வொருவருடைய கடமை என்பதை இந்த நேரத்தில் கூறுகிறேன்.
அதன் ஆர்வத்தை தான் நான் இந்த எழுச்சிகோலத்தில் பார்க்கிறேன். சாதாரண தொண்டனாகிய என்னை பொதுக்குழு உறுப்பினராகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று கழகத்தினுடைய அவைத்தலைவராக பணியாற்றுகின்ற வாய்ப்பை தந்த கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், லட்சோபலட்ச கோடானுகோடி தொண்டர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து, ஒற்றுமையாக செயல்படுவோம், வென்று காட்டுவோம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியை மீண்டும் எடப்பாடி அவர்கள் தலைமையில் அமைப்பும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.