Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 10 பேர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!!

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இருந்து வேன் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பேட்டை பகுதியில் சென்ற போது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(51), பிரியங்கா(21), பிரேமலதா(48), சசிரேகா(50), பிரிவினிகா(15), மார்பிரேட்(52), மேனகா(60) உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |