Categories
மாநில செய்திகள்

“சர்வதேச பயணத்தை எளிதாக்க விரைவில்”… மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!!!!

இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச பயணத்தை எளிதாகவும் அடையாளத் திருட்டிற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்காகவும் இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் பாஸ்போர்ட் சேவா திவாஸ் தினத்தை முன்னிட்டு இந்த தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பாஸ்போர்ட் சேவா திவாஸ் தொடர்பான விழாவில் பங்கேற்று பேசிய வெளிவருவத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசும்போது, மத்திய பாஸ்போர்ட் அமைப்புடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் நம் நாட்டு குடிமக்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை சரியான நேரத்தில் நம்பகமாக அணுக கூடிய வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் வழங்குவதற்கான உறுதிபாட்டை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றது. மேலும் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலங்களிலும் பாஸ்போர்ட் சேவைகள் அதே வீரியம் மற்றும் உற்சாகத்துடன் வழங்கப்பட்டது என்பதை குறிப்பிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தொற்று நோயால் அதிகரித்த தேவைகளை கையாளும்போது கடந்த ஒரு மாதத்தில் 4.50 லட்சம் கூடுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சராசரியாக 9 லட்சம் என்ற மாதாந்திர சராசரியுடன் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் பாஸ்போர்ட் சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாக மிக விரைவில் பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தரப்படுத்தப்பட்ட மற்றும் தாராளமயமாக்கபட்ட செயல்முறைகள், செயற்கை நுண்ணறிவு, சாட்- போட், அட்வான்ஸ் அனலிடிக்ஸ் போன்ற லேட்டஸ்ட் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமாக சிறப்பான அனுபவத்தை உறுதி செய்யும். இதற்கிடையே சர்வதேச விமான பயணத்தை எளிதாக்கும் விதமாக இந்திய குடிமக்களுக்கான பாஸ்போர்ட்டுகளை வெளியிடவும் அமைச்சகம் தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |