நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை இணையத்தில் அறிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நீண்டநாட்கள் காதலித்து வந்த சூழ்நிலையில் இரண்டு மாதம் முன்பாக அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். இந்த புகைப்படத்தினை ஆலியா பட் அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தநிலையில் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை சமூகவலைத்தள பக்கத்தில் ஆலியா பட் பகிர்ந்துள்ளார். அவர் இணையத்தில் பகிர்ந்ததாவது Our baby….. Coming Soon என பதிவிட்டுள்ளார். அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் சிங்கம், பெண் சங்கம் தனது குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதற்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றார்கள்.