Categories
உலக செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதை தடுத்தார்கள்…. இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டிய பாகிஸ்தான்…!!!

சீன அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்வதை ஒரு நாடு தடுத்ததாக பாகிஸ்தான் இந்தியாவை மறைமுகமாக குற்றம் சாட்டியிருக்கிறது.

14-ஆம் பிரிக்ஸ் மாநாடானது கடந்த 23ஆம் தேதியன்று சீனாவின் தலைமையில் பீஜிங் மாகாணத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ளவிடாமல் தங்களை ஒரு நாடு தடுத்ததாக பாகிஸ்தான் கூறியிருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் கூறியதாவது, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பிரிக்ஸ் நாடுகளின் 14ஆம் உச்சிமாநாட்டில் உலக வளர்ச்சி தொடர்பில் உயர்மட்ட ஆலோசனை நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக வளரும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த மாநாடு நடப்பதற்கு முன்பு இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடுகளையும் அழைப்பது குறித்து பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து தீர்மானிக்கப்படும் என்று சீன அரசு கூறியது.

எனினும் வருத்தத்திற்குரிய விதத்தில் இதில் பாகிஸ்தான் கலந்து கொள்வதை பிரிக்ஸ்-ல்  உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு தடுத்து விட்டது என்று இந்தியாவின் பெயரை கூறாமல் குறிப்பிட்டிருக்கிறது.

Categories

Tech |