Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு தெரியாதே…! மோடி அப்படியா சொன்னாரா ? நீங்களே ஓபிஎஸ்_ட கேளுங்களேன்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நம்முடைய கழகத்தினுடைய தலைமை நிலைய  செயலாளர் , முன்னாள் இணை  ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள்  அமைதிப்படுத்தினார். யாரும் அது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர் மேடையில் சொன்னதெல்லாம் நீங்கள் இருட்டடிப்பு செய்யாதீர்கள்.

மோடியை சந்திப்பது  பற்றி நான் எந்தவித கருத்தும் சொல்லவில்லை.  ஆனால் கட்சியின் ஒட்டுமொத்த முடிவு பொதுக்குழு தான். பொதுக்குழுவை பொருத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான். எனவே அதுதான் எல்லா இடங்களிலும் பேசபடுகின்றது. ஓபிஎஸ் எதற்காக மோடியை  சந்தித்தார் என்று தெரியாது. அதனால் நான் சொல்ல முடியாது. மோடி சந்திப்பது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

பாஜகவை பொறுத்தவரை மூன்றாவது பார்ட்டி தான். மூன்றாவது கட்சி என்று சொல்லும்போது எந்த ஒரு மூன்றாவது நபரின் தலையீட்டையும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த காலகட்டத்திலும் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதனால் அவர்களும் தலையிடவில்லை,  நாங்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனால் தலையிடாத ஒரு விஷயத்தை நீங்கள் எப்படி கேட்க முடியும் ?

துணை முதல்வர் பதவியை பெற்றுக்கொள்ள மோடி சொன்னார் என்றால், அதிமுகவில் பாஜக தலையீடு என சொல்லுறீங்க.மோடி ஏன் ஓபிஎஸ்ஸை துணை முதல்வர் பதவி வாங்க சொன்னார் என்ற கேள்வியை நீங்கள் ஓபிஎஸ்-இடம் தான் கேட்க வேண்டும். இந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லுவார் என தெரிவித்தார்.

Categories

Tech |