Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய விஹாரி.! இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்..!

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 216 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 83 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய நியூசி. ஏ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 346 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் நிதானமாக ஆடிய ப்ரியங்க் பஞ்சல் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த இளம் வீரர் சுப்மன் கில் – கேப்டன் விஹாரி ஜோடி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது.

இதில் சுப்மன் கில் 279 பந்துகளில் 204 ரன்களும், விஹாரி 113 பந்துகளில் 100 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் 448 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு அதிராக சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். இந்த இரட்டை சதத்தால், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடவுள்ள டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Categories

Tech |