Categories
உலக செய்திகள்

ஜி-7 மாநாடு…. தானாக சென்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய பைடன்… வைரலாகும் வீடியோ…!!!

ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி தானாக சென்று அழைத்து கைகுலுக்கி பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஜெர்மன் நாட்டில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 மாநாட்டின் ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜி-7 மாநாட்டில் இருக்கும் ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்தனர். அதற்குப்பிறகு தலைவர்கள் அனைவரும் அருகில் இருக்கம் பிற நாட்டு தலைவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை கூறினார்கள்.

அப்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவராகவே பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் சென்று அவரை அழைத்து கைகுலுக்கி வாழ்த்துக்களை கூறினார். இந்திய பிரதமரை பார்ப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி தானாகவே சென்று வாழ்த்துக்களை கூறியது உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |