Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு பணம் இரட்டிப்பாக கிடைக்கும்…. 3 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பணமோசடி 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவேக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு   சந்தித்து பேசிய மணிகண்டன் என்பவர்  தான் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிவதாகவும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய விவேக்குமார் மணிகண்டன் அவரது நண்பர் சிவநேசன், அன்புமணி, காளிதாஸ் உள்ளிட்ட 5 பேரை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் விவேக்குமார் சிவநேசனின்  வங்கி கணக்கிற்கு 3  லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் நீண்ட நாள் ஆகியும் பணம் வரவில்லை.

இதனையடுத்து விவேக்குமார் மணிகண்டனை சந்தித்து தனது பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அப்போது அவர்  விவேக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவேக்குமார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன் உள்ளிட்ட 2  பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன், மோட்டார் சைக்கிள், 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |