செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் ஊடகங்களிலே சொல்லலாம்… நான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ? எத்தனை முறை பேச்சுவார்த்தைக்கு முயன்று இருக்கிறோம், மூத்த தலைவர்கள் வந்தார்கள் என்பதெல்லாம் அண்ணன் அவர்களும் நன்றாக அறிவார்கள். ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார், நானே பேச்சுவார்த்தைக்கு பல முறை முயற்சி செய்து அவரிடத்தில் சென்று பேசி அதை அங்கு இருக்கக்கூடியவர்களை விட்டு கூட எங்களை திட்ட வைத்தார்கள்..
அதையும் தாண்டி கட்சி நலனுக்காக, தொண்டர்களின் நலனுக்காக கட்சியின் எதிர்காலத்திற்காக அம்மாவின் கனவை நினைவாக்க அதை பொறுத்துக் கொண்டுதான் அத்தனை தலைவர்களும் நான் உட்பட, அங்கு அவர் இல்லம் தேடி சென்று பேசினோம். ஆனால் அதற்கான விடையை காண்பதற்கு, தொண்டர்களின் நலனை பேணிக் காப்பதற்கு ஒரு சீர்திருத்தம் என்பது காலத்திற்கு ஏற்றவகையில் உருவாக்குவதற்கு காலத்தின் கட்டாயம். அதைத்தான் சொல்கிறார்கள்.
உங்களுக்கு நன்றாக தெரியும் திரைப்படத்தில் பார்த்தீர்கள் என்றால் நம்பியாரும், புரட்சித் தலைவரும் ஸ்கிரீன் பிளேவில் அவர் வில்லனாக பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் அவர் நல்லவர். சபரிமலைக்கு எல்லாம் போவார், ஆனால் திரையில் புரட்சித் தலைவரை எதிர்த்தார் என்கிறார் ஒரே காரணத்திற்காக தங்கள் ஆயுள் முழுவதும் நம்பியாரை வில்லனாகவே பார்த்தவர்கள் அன்னை தமிழகத்து மக்கள். ஆகவே இன்றைக்கு நீங்கள் நல்லவராக இருந்தாலும் மக்கள் நலனை நாடுபவராக…. தொண்டர்கள் நலனை நாடுபவராக இருக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை என தெரிவித்தார்.