சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் அதிமுகவில் ரேஷன் கார்டு வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன. விசாரணை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக முடிந்த பிறகு அண்ணா அல்லது கலைஞர் பிறந்த நாளில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.