Categories
தேசிய செய்திகள்

ஸ்டேட் பேங்க் அதிகாரிகளுக்கு ஷாக் நியூஸ்…. உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு….!!!!

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளில் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுப்பு பயண சலுகை யை திரும்ப பெற்று அதில் எந்த ஒரு தவறும் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு விடுப்பு பயண சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கான சலுகையை மட்டும் திரும்ப பெற்று கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி தான் வெளிநாட்டு பயண சலுகை திரும்பப் பெறப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் பாரத ஸ்டேட் வங்கி முடிவில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு state bank அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |