Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இந்த ஹாரன் பயன்படுத்தினால் ரூ.2000 வரை அபராதம்….. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஒலி மாசு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னையில் தற்போது ஒலி மாசு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால் ஆயிரம் ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்க அதிக வாய்ப்புள்ளது.

எனவே அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களைப் பொறுத்து இருக்கும் வாகன ஓட்டிகள் மீதும், அது போன்ற ஹாரன்களைப் பொறுத்து கொடுக்கும் மெக்கானிக்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை பாயும். முக கவசம் அடையாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனால் கட்டாயம் அனைவரும் உங்கள் கவசம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |