தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் துணை தேர்வுக்கு ஜூன் 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விடைத்தாள் நகல் பெறுவதற்கு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.