Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகள்: திறன்கள் மேம்படுவதாக கூறுவது தவறானது…. வெளியான அறிக்கை….!!!!

ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தை இழந்தவர்களில் ஒரு சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிகழ்வுகளை தடுக்கும் அடிப்படையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழுவை சென்ற 10/06/2022 அன்று அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் நிகழக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து அதை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்குமாறு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் வினித்தேவ் வான்கடே போன்றோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் இக்குழு ஆன்லைன் ரம்மி தடை அவசரசட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக தனது அறிக்கையில் வல்லுனர் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கியது. இந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்ற சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல் நலம் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது எனவும் முன்பே கொண்டுவரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புது சட்டத்தை கொண்டுவர வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |