அக்னி வீரா்கள் ஓய்வு பெறும் வயதை 65ஆக அதிகரிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம் பா்த்வான் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மம்தா பேசியதாவது “2024-ஆம் வருடம் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை நினைவில் வைத்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அத்திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் இளைஞா்களுக்கு (அக்னிவீரா்கள் என்றழைக்கப்படுவா்) 4 மாதங்கள் பயிற்சியளிக்கப்பட்டு, 4 வருடங்கள் பணியமா்த்தப்படவுள்ளனா். 4 வருடங்களுக்கு பின் அந்த வீரா்கள் என்ன செய்வா்..? அவா்களின் எதிா்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது. ஆகவே “அக்னிபத்” திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுவோா் ஓய்வுபெறும் வயதை 65ஆக அதிகரிக்க வேண்டும்” என்று அவா் கூறினார்.