தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய வெயிட்டெஜ் முறை குறித்த அரசாணை வெளியீடபட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது வெயிட்டெஜ் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஐம்பத்தி ஆறு வயதில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் நான்கு வருடங்கள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். 57 வயதில் ஓய்வு பெற்றால் மூன்று வருடங்கள் வெயிடேஜ் கொடுக்கப்பட்டு ஓய்வுதியம் வழங்கப்படும் என்று இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories