Categories
தேசிய செய்திகள்

அடடா! சாதனைக்கு வயது இல்லை…. நிரூபித்துக் காட்டிய 70 வயது மூதாட்டி….. என்ன செய்தார் தெரியுமா….?

70 வயது மூதாட்டி ஒருவர் அற்புதமான சாதனையை படைத்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் உள்ள விகே குன்னம் புரம் பகுதியில் ஆரிபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகிறது. இவர் நீச்சல் மீது அதிக ஆர்வமுள்ளவர் என்பதால் முறையாக நீச்சல் பயின்றுள்ளார். இந்நிலையில் ஆரிபா தன்னுடைய 2 கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு நீச்சலடித்துள்ளார்.

இவர் பெரியார் ஆற்றில் சுமார் 750 கிலோமீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் நீச்சலடித்து கடந்தார். மேலும் மூதாட்டியுடன் இணைந்து ஒரு சிறுவனும், 38 வயது பெண்ணும் நீச்சல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த மூதாட்டி சாதனைக்கு வயது இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

Categories

Tech |