Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! 96 மணி நேரத்தில்…. வியக்க வைக்கும் ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பம்….!!!!!!!

திருப்பூர் மாநகர் சின்ன காளிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக அரசின் மூங்கில் பூங்காவில் ஒரு பயிலரங்கத்தை  ஏற்படுத்தும் முயற்சியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் வெற்றி அமைப்பும் இணைந்து உயர்ரக ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக கட்டப்படும் இந்த கட்டிடத்தை வெறும் 96 மணி நேரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டு 2400 சதுர அடியில் கடந்த வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டு 96 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டு இன்று அதற்கான திறப்பு விழா நடைபெற்று உள்ளது.

இந்த பயிலரங்கம் கட்டுவதற்கு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 25 லட்சமும், டீமேஜ் நிறுவனம் வெற்றி அமைப்பு இணைந்து 25 லட்சம் என 50 லட்சம் மதிப்பீட்டில் 96 மணி நேரத்தில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 12 ஏக்கர் உள்ள இந்த நிலத்தில் மூங்கில்  பூங்கா மாணவர்களுக்கான பயிலரங்கு கட்டிடம், சிறுவர் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா போன்றவற்றை தனியார் பங்களிப்புடன் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்துகிறது. மேலும் இந்த கட்டிடத்தை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் குமார் பாடி போன்றோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி அமைப்பின் சிவராம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |