கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கமானது காலை 7.45 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
Categories