வால்பாறை காமராஜர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் என்ற மரியசூசை. பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவரது வீட்டு கோழி கூண்டில் பதுக்கிய மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மரியசூசை கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் இருக்கும் மரியசூசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு நகல் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
Categories