Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்…. பற்றி எரியும் வணிக வளாகம்….. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது‌. இந்தப் போரில் உக்ரைனின் முக்கியமான பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இப்போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்கிரைன்- ரஷ்யாவுக்கு எதிராக முழு முயற்சியோடு போராடி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியான கிரெமென்சுக்-கில் பகுதியில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் மீது ரஷ்யப் படையினர் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வணிக வளாகம் முற்றிலுமாக தீப்பற்றி எரிந்து அழிந்தது.

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் உக்ரைன் ஜனாதிபதி வணிக வளாகத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தபோது 100-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிலைமை ஆனது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |