செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், வழிகாட்டு குழு என்று பதினோரு பேரை வைத்து அமைத்தார்கள். 6 பேரை அவர் வழிமொழிந்தார். இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட திண்டுக்கல் சீனிவாசன், காமராஜர் என அவர்கள் வழிமொழிந்த தொண்டர்களின் பட்டியலை நீங்கள் பாருங்கள்.. மரியாதைக்குரிய மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் கழகத்தின் பொருளாளர் ஓபிஎஸ் அவர்களும் ஒரு பரிந்துரை கொடுத்தார்கள்.
அவருடைய பரிந்துரையை பாருங்கள். இந்த மதுரையில் கூட 2பேரை பரிந்துரைத்தார். ஓபிஎஸ் உடன் சென்றார் என்ற ஒரு காரணத்திற்காக இப்படி தலைமை ஒரு பாரபட்சம் காட்டினார். தொண்டர்களை எதிர்காலம் என்னவாகும் ? கட்சியினுடைய எதிர்காலம் என்னவாகும் ? புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இரட்டை புறா , சேவல் என பிரிந்தபோது அண்ணன் பொன்னையன் அவர்கள், அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் எல்லோருமே வேறு அணியில் இருந்தாலும் இங்கே இருக்கக்கூடிய சபாநாயகர் காளிமுத்து ஐயா அவர்கள் வேறு அணியில் இருந்தார். எல்லோரும் திட்டும்போது என் இதயம் வலிக்கும்.
ஆனால் அண்ணன் காளிமுத்து அவர்கள் திட்டும்போது கூலாங்கல்லை எடுத்து என்னுடைய நெத்தியிலே எரிவதைப் போல வலிக்கும். ஆனால் அவரையே சபாநாயகர் அந்தஸ்திலே நான் எழுந்து கும்பிடுகின்ற அந்த உயர்ந்த ஸ்தானத்திலே உட்கார வைத்து அழகு பார்த்தேன் எதற்காக ? இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். இந்த இயக்கத்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். இந்த இயக்கத்தினுடைய தொண்டர்களின் நலம் நன்றாக இருக்க வேண்டும்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்….. புரட்சித்தலைவர் காலத்தில் அண்ணன் எஸ் டி எஸ் அவர்கள் புரட்சித் தலைவரை எதிர்த்தார். அப்போது அவர் முன்வைத்த வாதம் என்ன என்று நாட்டிற்கு தெரியும். ஆனால் அவர் இயக்கத்தை எதிர்த்து தோல்வி பெற்றார்.
புரட்சித்தலைவி அம்மாவை காலத்தில் அண்ணன் திருநாவுக்கரசு அவர்கள் எதிர்த்தார்கள், இயக்கத்தை எதிர்த்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தவர்கள் வீழ்ந்து இருக்கிறார்களே தவிர அவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அந்த வரிசையில் தான் இன்றைக்கு ஓபிஎஸ் இடம் பிடித்து விடுவாரோ என்கின்ற கவலை எல்லோருக்கும் இருக்கிறது, எனக்கும் இருக்கிறது. அதை மீண்டும் மீண்டும் அவரிடத்திலே வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.