Categories
சென்னை மாவட்ட செய்திகள்

11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 89 கைதிகள்…. பாராட்டி வரும் அதிகாரிகள்…..!!!!

தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகளை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் புழல் என்ற சிறை  அமைந்துள்ளது. இந்த சிறையில் வைத்து  11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் கடலூர், வேலூர், திருச்சி, மதுரை பாளையங்கோட்டை என தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறையில்  இருந்து  99 கைதிகள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது.

அதில் மதுரை சிறையை சேர்ந்த அமுது செல்வி என்பவர் 557 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும், அருண் என்பவர் 538 மதிப்பெண்களை  பெற்று இரண்டாம் இடத்தையும், புழல் சிறையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் 516 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர், மேலும் தேர்வு எழுதிய 99  பேரில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், இவர்களை சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |