Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி புதிய இணையதளம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து விவரம் பெற கட்டணமில்லாத தொலைபேசி எண் 14417 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பிரத்தியோக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியவை படிக்கும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த உதவி தொகையை பெற அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படித்திருக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று அதன் பிறகு 9 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளும் இந்த நிதி உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படித்த பிறகு முதல் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே திட்டம் பொருந்தும். அதாவது ஐடிஐ, ஆசிரியர் பட்டய படிப்பு, ஏ.பி., பி.எஸ்.சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட அனைத்து கலை மற்றும் அறிவியல், கவின் கலை கல்லூரி பாடங்கள், பிஇ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., பி.எஸ்.சி., இளங்கலை கால்நடை அறிவியல், சட்டம், இணை மருத்துவ படிப்புகள் ஆகிய படிப்புகளுக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

ஆனால் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. நிகழ் கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பிறகு இணையதளம் மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமில்லாமல் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும் இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் மாணவியரும் விண்ணப்பிக்கலாம். தொழில் மற்றும் மருத்துவ படிப்புகளில் இறுதியாண்டு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே பயன் அடைய முடியும் முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் பயன் பெற இயலாது. இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம். மேலும் மாத உதவித்தொகை பெற திட்டத்திற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |