ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்து முன்னரே ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது போன்ற விவரங்கள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அவ்வகையில் வருகின்ற ஜூலை மாதத்தில் மொத்தம் 17 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஜூலை மாதத்தில் ஒன்பது விடுமுறை நாட்கள் வருகிறது. இதனைத் தவிர பொதுவான அரசு விடுமுறைகளும் உள்ளது.இந்த 9 நாட்கள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். எனவே விடுமுறை நாட்கள் பட்டியலைப் பார்த்து வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவை தொடர்பான வேலைகளை முன்னரே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
- ஜூலை 1- ரத யாத்திரை (ஒடிசா)
- ஜூலை 5 – குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள் (ஜம்மு & காஷ்மீர்)
- ஜூலை 6 – MHIP நாள் (மிசோரம்)
- ஜூலை 7 – கர்ச்சி பூஜை (திரிபுரா)
- ஜூலை 9 – இத்-உல்-அதா (பக்ரித்)/ இரண்டாவது சனிக்கிழமை
- ஜூலை 11 – ஈதுல் அஸ்ஹா
- ஜூலை 13 – தியாகிகள் தினம் (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
- ஜூலை 13 – பானு ஜெயந்தி (சிக்கிம்)
- ஜூலை 14 – பென் டியன்க்லாம் (மேகாலயா)
- ஜூலை 16 – ஹரேலா (உத்தரகாண்ட்)
- ஜூலை 23 – நான்காவது சனிக்கிழமை
- ஜூலை 26 – கேர் பூஜை (திரிபுரா)
- இதனை தவிர ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்காது.