இந்தியாவில் மொபைல் வைத்திருக்கும் பெரும்பாலானோர் ஜியோ சிம் கார்டு பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஜியோ சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதற்கு அவ்வப்போதுவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. கேஒய்சி போன்ற விஷயங்களில் வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக மொபைல் ஆப் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜியோ நெட்வொர்க் தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளது.
அதில், மொபைலில் தேவையற்ற ஆப்களை வாடிக்கையாளர்கள் யாரும் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும், அப்படித் தெரியாமல் ஏதாவது மொபைல் செயலியைப் டவுன்லோட் செய்வதாக இருந்தால் அதன் உண்மைத்தன்மை பற்றி பரிசோதனை செய்த பிறகு டவுன்லோட் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது. ஸ்மார்ட் போனில் இருக்கும் பல்வேறு மொபைல் ஆப்களை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அரசு அதிகார பூர்வமற்ற மொபைல் செயலிகளை டவுன்லோட் செய்து பயன்படுத்தினால் அதிலிருந்து பயனாளியின் தனிநபர் விவரங்களைத் திருடி அதனை வைத்து பணத்தை திருடுகின்றனர். எனவே இதுபோன்ற விஷயங்களில் வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது