Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், ஜூன் 30-ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இனிவரும் நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் குமரி கடல், கர்நாடகா,மத்தியகிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |