Categories
மாநில செய்திகள்

“திருமாவளவன் வழக்கு ரத்து”… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2019 ஆம் வருடம் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். இதனை அடுத்து இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி மூவரும் ஆஜராக வேண்டும் இல்லையென்றால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என விசாரணை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேர் சார்பிலும் வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஜனநாயக ரீதியிலான போராட்டம்தான் என்றும் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை எனவும் வாதிடப்பட்டது இதனையடுத்து மூவர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |