பிரபல நடிகர் ஒருவர் ரகசிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் சினிமா குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் ஆவார். இவர் பிரபல + நடிகை ஆலியா பட்டை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ரன்பீர் கபூரின் வீட்டில் நடைபெற்றது. இந்நிலையில் ரன்பீர் கபூர் ஒரு பேட்டியில் தான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் ரூபாய் 250 என்றும், அதை தன்னுடைய தாயிடம் கொண்டு கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இவர் ரகசியமாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்துள்ளார். இந்த தகவலை வருண் தவான் கூறினார். இந்த ரகசிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஆலியா பட்டுக்காக வைத்திருக்கிறார் எனவும் கிண்டலாக கூறினார்.
இதற்கு ரன்பீர் கபூரின் தாயும் சிரித்தார். ஆனால் ரன்பீர் கபூர் எனக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்கள் யாரும் கிடையாது என்றும், அதனால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றும், நான் எந்த விதமான போஸ்டயும் அதில் போடுவது கிடையாது என்றும் கூறினார். மேலும் ரன்பீர் கபூர் பிரம்மாஸ்திரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற ஜூலை 22-ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.