MRI ஸ்கேன் எடுப்பதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை!!
எம் ஆர் ஐ (MRI – Magnetic Resonance Imaging ) ஸ்கேன் என்றால் காந்த அதிர்வு அலை வரைவு எனப்படும்.
எம் ஆர் ஐ பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் மனித உடலில் உள்ள உள்ளுறுப்புகள் ஏதோவொரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த இடத்தை முப்பரிமாண ஸ்கேன் படமாகப் பெற முடியும்.
1. மூளை
2. எலும்பு
3. தண்டுவடம்
4. தசை இணைப்புகள்
5. கல்லீரல்
6. இதயம்
7. இதயத் தமனிகள்
போன்ற உள்ளுறுப்புகள் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய எம் ஆர் ஐ ஸ்கேன் உதவுகிறது. ஆனால் அடிக்கடி இந்தச் சோதனைகள் செய்தால் பாதிப்பு ஏற்படும்.
எம் ஆர் ஸ்கேன் : உயர் காந்தப்புலங்களின் வலிமை…
எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷினின் காந்தவிசை புவியின் காந்த விசையோடு ஒப்பிடுகையில் 30,000 மடங்கு மிகு சக்தி கொண்டது. அதுமட்டுமல்ல ஒரு குளிர்சாதனப் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள காந்த விசையோடு ஒப்பிடுகையில் 200 மடங்கு வலிமையானது.
எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை விலக்கப்பட்டவர்கள்…
நரம்பியல் நோய் பாதிப்பு உள்ளவர்களிடையே வலி குறைப்பிற்காக நெர்வ் ஸ்டிமுலேட்டர் எனும் எலக்ட்ரிகல் இம்பிளாண்ட் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகள் MRI ஸ்கேன் பரிந்துரைக்கப்படுவதில்லை.
இதயத்துடிப்பை சீராக வைப்பதற்காக கார்டியோ வெர்ட்டர், டி ஃபைப்ரிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்ட நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு MRI ஸ்கேன் பரிந்துரைக்கப்படுவதில்லை.
அனுமதி இல்லை :
MRI ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் ரிஸ்ட் வாட்சுகள், அலைபேசிகள், தங்கம் மற்றும் வெள்ளியாலான உலோக ஆபரணங்கள், ஹியரிங் எய்டு உள்ளிட்ட உலோகக் கருவிகளை எடுத்துச் செல்லக் கூடாது. மேலும் உலோகத்தாலான அனைத்துக் கருவிகளுக்கும் MRI ஸ்கேன் அறைக்குள் கண்டிப்பாக அனுமதி இல்லை.