Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி ஓட்டுநரிடம் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் சாலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர்  லாரியில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் களைப்பாக இருந்ததால் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த  மாரியப்பன்  என்பவர்  லாரியில் தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின்  செல்போனை திருடியுள்ளார். இதனை பார்த்த செந்தில்குமார் அப்பகுதி மக்களின் உதவியுடன் மாறியப்பனை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து  காயமடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |