Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் நகராட்சி தலைவர்  நவநீத கிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் அதிகாரிகள்  வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. பிளாஸ்டிக் கவர்களில்  வழங்கப்படும் உணவு பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது மஞ்சை பையையும், உணவு வாங்க  செல்லும்போது பாத்திரங்களையும் கொண்டு செல்ல வேண்டும். மேலும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் கடைகள் பூட்டி சீல் வைப்பது மட்டும் இல்லாமல் அவற்றின் உரிமையாளர் மீதும்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறி எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |