பழனி-கோவை இடையேயான மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலிருந்து கோவை வரை ரயில்வே துறை சார்பாக மின்மயமாக்கல் பணியானது சென்ற சில வருடங்களாகவே நடந்து வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனால் நேற்று மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் இன்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமானது தொடங்கியது.
பின் பழனி வந்த பிறகு டீசல் என்ஜின் கழற்றப்பட்டு மின்சார ரயில் என்ஜின் பொருத்தப்பட்டது. பின் கோவை வரை பயணிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. இன்னும் கோவை-மதுரை வழித்தடத்தில் திண்டுக்கல்-பழனி இடையே மட்டும் ரயில்வே மின்மயமாக்கல் பணியானது நிலுவையில் இருக்கின்றது. இந்த பணியை விரைவில் முடித்து மதுரை-கோவை இடையேயான மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறையினர் கூறியுள்ளனர்.