அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே. வி.கே. நகரில் முதியவரான உமையண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அண்ணாநகர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த உமையண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உமையண்ணன் உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.