Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

MGR-இன் காலை பிடித்து கதறி அழுதேன்…. கழகத்தின் முதல் ஆள் நான் தான்… காலரை தூக்கிவிடும் தமிழ்மகன் உசேன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரை  நீக்கி விட்டார்கள் என்ற செய்தியை சொன்னவுடன்,  அந்த இடத்திலேயே நடத்துனரை அழைத்து ஒரு வெள்ளைத்தாளில் காட்டு தர்பார் புரிகின்ற கருணாநிதி ஆட்சியில் அரசு டிரைவர் வேலை (ஓட்டுநராக) நான் பணியாற்ற விரும்பவில்லை என்று அங்கேயே ராஜினாமா செய்துவிட்டு,  அந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவன்

புரட்சித்தலைவர் உடைய காலை பிடித்து அழுதேன். அழுதவுடன் புரட்சித் தலைவர் சொன்னார் நான் என்னடா செய்ய வேண்டும் என்று கேட்டார் ?  நீங்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும். உங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கோடானுகோடி எம்ஜிஆர் பக்தர்கள் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேன். சரி காரில் ஏறி என்று சொன்னார். சத்தியா ஸ்டுடியோவிற்கு நானும் அவரும் காரில் சென்றோம். சத்தியா ஸ்டூடியோ சென்றவுடன் அங்கே இருந்த மிகப் பெரிய கூட்டத்தை கண்டு அவரே கண் கலங்கி போனார்.

தாய்மார்கள் எல்லாம் சாலையில் படுத்து கொண்டார்கள் காருக்கு முன்னால்.. கண்கலங்கி போய் நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்கள் ?  அப்படி என்று சொல்லி மார்பிலே அடித்துக் கொண்டு தாய்மார்கள் எல்லாம் கேட்டார்கள், நான் உள்ளே போய் பதில் சொல்கிறேன் என்று சொல்லி உள்ளே சென்றார். உள்ளே சென்றவுடன் நான் தனி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறீர்கள் என்று கேட்டார் ?

அப்போது அங்கு இருந்த நாங்கள் எல்லாம் சேர்ந்து சொன்னோம்….  நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்து ஆக வேண்டும் என்று சொன்னோம். சரி எனக்கு ஒரு மனு எழுதித் தாங்க என்று சொன்னார். அந்த மனுவில் 11 பேர் கையெழுத்து போட்டார்கள். நானும் 4ஆவது கையெழுத்தை ரத்தத்தால் போட்டேன். புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று….

அந்த அடிப்படையில் அன்றைக்கு மாலையில் நான் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற முடிவை மேற்கொண்டார். 1972 அக்டோபர் மாதம் 17ஆம் தேதி கட்சியை துவங்கியவுடன் முதல் மாவட்ட அமைப்பாளர் என்னை தான் போட்டார். தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர் தமிழ் மகன்  உசேன் என்று அறிவித்தார். அந்த அடிப்படையில் புரட்சித்தலைவர் தொண்டனாக….

இனிய தொண்டனாக…  நான் அன்றைய காலம் தொட்டு இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  புரட்சித்தலைவர் காலத்திற்குப் பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை கண்டெடுத்து,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமித்தார். நான் பதவி ஒன்றும் கேட்கவில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |