செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஓபிஎஸ்-இடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியாச்சு, அவர் வரவே இல்லை. டெல்லிக்கு போயிட்டு வந்து இருக்காரு, மதுரைக்கு வருகிறார், எல்லாரும் தொலைபேசியில் கூப்பிட்டு இருக்காங்க. இதுவரைக்கும் அப்படி கூப்பிட்டது இல்லை. இதுதான் முதல் முறை கூப்பிடுகிறார். எல்லோரும் எங்களிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கிறது.
இந்த நிலை எதற்கு ? ஒரு தலைமை வந்தால் எல்லோரும் நின்று வரவேற்க வேண்டும். ஆனால் அவர்கள் எல்லோரையும் வா வா என்று அழைப்பது எதற்காக ? என்று தெரியவில்லை.எல்லா தொண்டர்களுடைய எண்ணமும் ஒற்றை தலைமை வரவேண்டும். அந்த ஒற்றை தலைமைக்கு நாம் பச்சை கொடி காட்டினால் அவருடைய எதிர்காலம் பசுமையாக இருக்கும்.
இல்லாவிடில் அவர்களுடைய எதிர்காலம்…. இயக்கத்தினுடைய எதிர்காலம் பசுமையாக இருக்கும். பச்சைக்கொடி காட்டாதவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நான் சாமானிய கொண்டதாகத்தான் என்றைக்கும் இருக்கின்றேன். புரட்சித்தலைவி அம்மாதான் எனக்கு அம்மா பேரவை கொடுத்தார்கள், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் பதவி கொடுத்தார்கள், மாணவரணி செயலாளர் கொடுத்தார்கள்.
மூன்று முறை சட்டமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். மூன்று முறையும் அம்மா செல்வாக்கால், புரட்சி தலைவர் செல்வாக்கால், அண்ணன் எடப்பாடி ஓபிஎஸ் அவர்களின் செல்வாக்கால் நான் வெற்றி பெற்றேன் இப்போதும் அவருடைய காட்டு வழியே பயணிக்கும் நான் பதவியை இலக்கு வைத்து பயணிப்பது அல்ல அப்படி என்று சொன்னால் அண்ணன் எடப்பாடி அவர்கள் தலைமை தாங்குகின்ற போது இளைஞர் பெருவிழாவிற்கு ஒரு லட்சம் இளைஞர்களை திரட்டி இதே மதுரை மாவட்டத்தில் நீங்களெல்லாம் பார்த்தீர்கள்.
அதன் பிறகு புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை இதே மதுரையில் தான் நடத்தினோம். நீங்கள் எல்லோரும் பார்த்தீர்கள்… அதைத் தொடர்ந்து 32 வருவாய் மாவட்டத்திலும் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்றது. அரியலூரில் நடந்த நிகழ்ச்சியில் தான் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் இணைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு 120 திருமணங்களில் இரண்டு தலைவர்களையும் அழைத்து இங்கு நடத்தினோம். அதற்குப் பிறகு சைக்கிள் பேரணியையும் இரண்டு தலைவர்களை அழைத்து வந்து துவக்கி வைத்தோம். அதன் பிறகு நடைபயணம் நடத்தினோம்.
புரட்சித்தலைவர் – புரட்சித்தலைவி அம்மாவின் திருப்பெயரில் மணி மண்டபத்தை கட்டி இரண்டு தலைவர்களையும் அழைத்து வந்து தான் அதை திறந்து வைத்தோம். அதற்குப் பிறகு கொரோனா காலத்தில் அம்மா கிச்சன் என்பது இரண்டு தலைவர்களும் ஆசீர்வாதத்துடன், வாழ்த்துக்களுடன், வழிகாட்டுன் நடத்தினோம். தலைவர்கள் எல்லோரும் இருந்துதான் இந்த இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும், வழிநடத்த வேண்டும், பெயரும் புகழும் சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இதில் யார் எந்த இடத்தில் போக வேண்டும் என்று தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.