தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகமெங்கும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முககவசம் அணிவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 30-40% கும் மேற்பட்டவர்கள் முககவசம் அணிவது மகிழ்ச்சி. இன்னும் இதனை கூடுதல் ஆக்கும் விதத்தில் இன்று மயிலாப்பூரில் 50,000 பேருக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.