தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் விதமாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தங்களுடைய உயர்கல்விக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து பட்டப் படிப்புகள் பட்டயப் படிப்புகள் என துறைவாரியாக அறிய வைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் AAA என்ற கல்லூரியில நாளை கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.