Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : ஜூலை 6ஆம் தேதி வரை மட்டுமே….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பண்ணுங்க….!!!

பிளஸ் 1 துணை தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் ஒன் மாணவர்களுக்கு கடந்த ஜூன் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.  பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான அறிவிப்பினை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.  பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு ஜூன் 29-ஆம் தேதி இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி மாணவர்கள் http://www.dge.tn.gov.in/ என்று இணையதளத்திலோ அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் பதினோராம் வகுப்பு மறுகூட்டலுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |