Categories
கால் பந்து விளையாட்டு

இரண்டு கோல் அடித்து ரொனால்டோ அசத்தல்!

ஃபியோரெண்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அடித்த இரண்டு கோல்கள் உள்பட 3-0 என்ற கணக்கில் ஜுவண்டஸ் அணி வெற்றிபெற்றது.

சீரி ஏ லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜுவண்டஸ் அணியை எதிர்த்து ஃபியோரெண்டினா அணி ஆடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ஜுவண்டஸ் அணிக்கு முன்னால், ஃபியோரெண்டினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனிடையே முதல் பாதியின் ஜுவண்டஸ் அணிக்கு 40ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் நட்சத்திர வீரர் ரொனால்டோ முதல் கோலை அடித்து அசத்தினார். அதன்பின் இரண்டாம் பாதியின் 80ஆவது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், மீண்டும் ரொனால்டோ இரண்டாவது கோலை அடித்து அசத்தினார்.

தொடர்ந்து இரண்டாம் பாதி முடிவுக்கு வர, கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த கூடுதல் நிமிடத்தில் ஜுவண்டஸ் அணியின் மத்திஜிஸ் டி, மூன்றாவது கோலை அடிக்க ஜுவண்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் சீரி ஏ தொடரின் 9 போட்டிகளில் ரொனால்டோ தொடர்ந்து கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீரி ஏ தரவரிசைப் பட்டியலில் ஜுவண்டஸ் அணி 54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Categories

Tech |