Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி EB ஊழியர்கள்…. இந்த உடையை தான் அணியணும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணியின்போது மின்சார வாரிய பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் மற்றும் துப்பட்டா உடன் சுடிதார் அணிந்து பணியாற்றலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.மின்சார வாரிய பணியின் போது ஆண் ஊழியர்கள் பார்மல் பேண்ட், வேட்டி மற்றும் இந்திய கலாச்சார உடைகளை அணியலாம். மேலும் பணியின்போது ஊழியர்கள் கேஷுவல் உடைகளை அணியக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அலுவலகத்தில் கண்ணியம் ஒழுக்கம் ஆகியவற்றை பெறும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |