புதுச்சேரி மற்றும் இலங்கைக்கு இடையில் எந்நேரத்திலும் சரக்குகப்பல் போக்குவரத்தானது துவங்குகிறது. இதன் காரணமாக எரிப்பொருள், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களை இலங்கை நாட்டிற்கு ஈஸியாக கொண்டு போகலாம். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதாவது அங்கு எரிபொருள், மருந்துகள், உணவுப்பொருட்கள், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை நாட்டின் மீன் வளத்துறை மந்திரியும், தமிழர்கட்சி ஒன்றின் தலைவருமான டக்ளஸ்தேவானந்தா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்ததார். அப்போது அவர் கூறியதாவது “இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் சரக்குகப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
ராணுவ அமைச்சகம் ஒப்புதல் வழங்கிவிட்டதால், எந்த நேரத்திலும் போக்குவரத்து தொடங்கும். இலங்கை நாட்டின் வட பகுதியிலுள்ள காங்கேசன் துறைமுகத்துக்கும், இந்தியாவின் புதுச்சேரிக்கும் இடையில் இந்த சரக்கு கப்பலானது இயக்கப்படும். இப்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இடையில் இது இலங்கைக்கு நிவாரணமாக அமையும். இந்தியாவிலிருந்து எரிப்பொருள், மருந்து, உரம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள், மலிவு விலையிலும், எளிதாகவும் இலங்கைக்கு கிடைக்கும். சரக்கு கப்பல் போக்குவரத்துக்கான ஆரம்பகட்ட பணிகளை துவங்க போகிறேன். இதுபோன்று யாழ்ப்பாணத்தின் பலாலி விமானம் நிலையத்துக்கும், தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி போன்ற நகரங்களுக்கும் இடையில் ஜூலை 1ஆம் தேதி விமான போக்குவரத்து தொடங்குகிறது” என்று அவர் கூறினார்.