Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு…. இனி இது கட்டாயம்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் மலர்கண்காட்சி நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த வருடம் தான் மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த மலர் கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த வருடம் நடைபெற்ற 124வது மலர்க்கண்காட்சியை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் அவ்வப்போது மழை பொழிவு இருந்ததால் உதகையில் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த மாதம் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அத்துடன் தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொண்டு தான் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி முக கவசம் அணியாமல் வந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தோட்டக்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |