ஜிஎஸ்டி கவுன்சிலின் 147- ஆவது கூட்டம் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டம் இன்று முடிவுக்கு வரும் நிலையில், பல்வேறு பொருள்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மற்றும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதிதாக சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக ஜிஎஸ்டி விதிக்கப்படும் பொருட்கள்:
பேக்கேஜ் செய்யப்பட்ட இறைச்சி, மீன், தயிர், பன்னீர் மற்றும் தேன் ஆகியவற்றை இருக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும். வங்கிகள் சேட்புக் வழங்குவதற்கு வசூலிக்கும் கட்டணத்தை 18 சதவிகித வட்டி விதிக்கப்படும். அட்லஸ் மேப், வரைபடம் மற்றும் சார்ட்ஸ் போன்றவற்றிற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வாடகை வசூலிக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
பேக்கேஜ் செய்யப்படாத, லேபிள் செய்யப்படாத மற்றும் பிராண்டிங் செய்யப்படாத பொருட்களுக்கு தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விலக்கு நடைமுறையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை எப்போதிலிருந்து அமல்படுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.இருந்தாலும் தற்போது வெளியாகியுள்ள தகவல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.