Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் ரயில் வழித்தடங்கள் மாற்றம்….. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜூலை மாதத்தில் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால் அல்லது டிக்கெட் புக்கிங் செய்து இருந்தால் பயணிகள் கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள். வருகின்ற ஜூலை மாதம் முதல் பல ரயில்களின் நேரத்தை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வே தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,ரயில்களில் பழுது மற்றும் போக்குவரத்து தடை காரணமாக சில ரயில்களின் வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,

ரயில் எண் 00761 ரேனிகுண்டா-ஹஸ்ரத் நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ்  ஜூன் 27 முதல் ஜூலை 20 வரை கச்சேகுடா, நிஜாமாபாத், முத்கேட், பிம்ப்ளேகுடி, மஜ்ரி வழியாக இயக்கப்படும்.

ரயில் எண் – 00762 ஹஸ்ரத் நிஜாமுதீன் – ரேனிகுடா துரந்தோ எக்ஸ்பிரஸ் ஜூலை 19 வரை பிம்ப்ளேகுடி, முட்கேட், நிஜாமாபாத் கச்சேகுடா வழியாக இயக்கப்படும்.

ரயில் எண் – 12649 யஸ்வந்த்பூர் – ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ்  ஜூலை 19 வரை கச்சேகுடா, நிஜாமாபாத், முட்கேட், பிம்ப்ளேகுடி வழியாக இயக்கப்படும்.

ரயில் எண் 12650 ஹஸ்ரத் நிஜாமுதீன் – யஸ்வந்த்பூர் விரைவு ரயில் ஜூலை 19 வரை கச்சேகுடா, பிம்ப்ளேகுடி நாக்பூர் வழியாகச் செல்லும்.

ரயில் எண் – 22705 திருப்பதி – ஜம்மு எக்ஸ்பிரஸ் ஜூலை 5, ஜூலை 12 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் செகந்திராபாத், நிஜாமாபாத், முட்கேட், பிம்ப்ளேகுட்டி மற்றும் மஜ்ரி வழியாக இயக்கப்படும்.

ரயில் எண் – 12213 யஸ்வந்த்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் செகந்திராபாத், நிஜாமாபாத், முத்கேட், நாந்தேட், பூர்ணா, அகோலா, கந்த்வா மற்றும் இடார்சி ஆகிய இடங்களில் இருந்து ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 9 ஆம் தேதிகளில் புறப்படும்.

ரயில் எண் – 12270 ஹஸ்ரத் நிஜாமுதீன்-சென்னை எக்ஸ்பிரஸ் போபால், நாக்பூர், பல்லார்ஷா, விஜயவாடா வழியாக ஜூலை 9, ஜூலை 12 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் செல்லும்.

ரயில் எண் – 12591 கோரக்பூர் – யஸ்வந்த்பூர் விரைவு ரயில் 9 ஏப்ரல் அன்று இடார்சி, கந்த்வா, அகோலா, பூர்ணா செகந்திராபாத் வழியாகச் செல்லும்.

ரயில் எண் – 05303 கோரக்பூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இடார்சி, கந்த்வா, அகோலா, பூர்ணா, செகந்திராபாத், வாரங்கல் வழியாக 9 ஏப்ரல் அன்று செல்லும்.

ரயில் எண் 12724 புது தில்லி-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 9, ஏப்ரல் 12 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு இயக்கப்படும்.

Categories

Tech |