Categories
சினிமா தமிழ் சினிமா

இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகர்…. ஓடிடி தளம் பற்றிய பரபரப்பு கருத்து…. என்ன சொன்னார் தெரியுமா….?

இயக்குனர் சமய முரளி இயக்கத்தில் ‘கனல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை த நைட்டிங்கேல் புரோடக்சன் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜான் விஜய், கிருஷ்ணன், சுவாதி, ஸ்ரீதர் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தென்மா மற்றும் சதீஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ள ‘கனல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் ராதாரவி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து விழாவில் ராதாரவி பேசியதாவது, தாழ்த்தப்பட்ட மக்களை நாம் எவ்வளவுதான் மட்டம் தட்டினாலும் அவர்கள் வளர்ந்து கொண்டேதான் இருப்பார்கள் என்றார்.

இதனையடுத்து இயக்குனர் சமய முரளி மேலே இருந்து வந்தவர் என்றார். அதன் பிறகு தற்போது எல்லோரும் ஓடிடி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓடிடி ஆனது தற்போது கொடுத்தாலும், பிறகு அவனே பிக்ஸ் பண்ணுவான். இதை நான் பெரிய ஹீரோக்களுக்கும் தான் சொல்கிறேன். பொதுவாக ஒரு படம் என்றாலே அதை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் எப்பவும் நம்பர்-1 திறமைசாலி தான். அவர் நடித்த விக்ரம் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை குவித்து வருகிறது. அதன்பிறகு சமய முரளி இயக்கிய ‘கனல்’ திரைப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என நம்புகிறேன் என்றார்.

Categories

Tech |