Categories
உலக செய்திகள்

இன்று தொடங்கியது நேட்டோ உச்சி மாநாடு…. உக்ரைன் போர் குறித்து ஆலோசனை…!!!

நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது இன்று தொடங்கியிருக்கும் நிலையில் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ உச்சி மாநாடானது, ஸ்பெயின் நாட்டில் இன்று ஆரம்பமாகியிருக்கிறது. நேட்டோ தலைவர்கள் கூட்டணியில் மாற்றங்கள் செய்வதற்கான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதற்கு முன்பு நேட்டோ பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோவின் கூட்டணியை மாற்ற மற்றும் அதன் குடிமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் முக்கிய தீர்மானங்களை தெரிவித்தார்.

புதிதான இந்த தீர்மானங்கள் கடும் போட்டி மற்றும் அபாயமான உலகில் நேட்டோவை வருங்காலத்தில் எப்படி கொண்டு செல்வது என்பது குறித்த வரைபடமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த மாநாட்டிலும் உக்ரைன் போர் குறித்து தான் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், நேட்டோ படைகளை கிழக்கு பகுதி வரை விரிவுபடுத்தும் விதமாக படைகளின் எண்ணிக்கையை மூன்று லட்சமாக அதிகரிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.

இது ரஷ்ய நாட்டை மேலும் சண்டையிட தூண்டும் விதமாக உள்ளது. இதன் விளைவாக உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் போர் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |